சிரியா நிறுவனத்திற்கு மாற்று நோபல் பரிசு

படத்தின் காப்புரிமை AFP
Image caption போரால் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியா

நோபல் பரிசுக்கான மாற்று விருதாக கருதப்படும் "ரைட் லைவ்ளிஹுட் விருது" இந்த வருடம் ஒரு சிரியா உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

"வைட் ஹெல்மட்" என்னும் அந்த அமைப்பின் அதிக தைரியம், இரக்கம் மற்றும் மனிதாபிமான செயல்கள் ஆகியவற்றிற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் எதிர்தரப்பு பிடியில் இருக்கும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் பல ஆபத்துக்களை சந்தித்து தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

துருக்கிய எதிர்தரப்பு செய்தித்தாளான ஜூம் யூரியெட், எகிப்திய பெண்கள் நல உரிமை பிரசாரகர் மொசன் ஹசான் மற்றும் ரஷியாவில் உள்ள அகதிகள் மற்றும் குடியேறிகளின் உரிமைகளுக்காக பணி புரிந்த ஸ்விட்டலானா கனுஷ்கினா அகியோரும் இந்த வருடத்திற்கான ரைட் லைவ்ளிஹுட் விருதைப் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்