தென் ஆஃப்ரிக்க ஆளும் கட்சி மீது மண்டேலாவின் முன்னாள் மனைவி கடும் தாக்கு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வின்னி மடிக்கீஸெல்-மண்டேலா

தென் ஆஃப்ரிக்காவின் ஆளும் ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையை வின்னி மடிக்கீஸெல்-மண்டேலா கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் பல விஷயங்கள் தவறாக இருப்பதாகவும், கட்சியிலுள்ள மூத்தவர்களுடன் இணைந்து பணியாற்றிட ஒட்டு மொத்தமாக புதிய தலைமை ஒன்று வேண்டும் என்றும் இனவெறிக்கு எதிரான மூத்த பிரசாரகரும், மறைந்த நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியுமான வின்னி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் ஊழல் குறித்தும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஜேகப் ஜூமா மீது விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸில் உள்ள வெவ்வேறு பிரிவுகள் கட்சி செல்லும் திசையை நோக்கி போராடி வருகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு சுழலில் வின்னியின் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்