ரஷ்யா - அமெரிக்கா இடையே சிரியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் எட்டும் முயற்சி தோல்வி

சிரியாவில் மீண்டும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா - ரஷ்யா இடையே நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நியுயார்க் பேச்சுவார்த்தையில்

நியுயார்க்கில் நடந்த சர்வதேச பேச்சுவார்த்தை, நீண்ட, மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஏமாற்றமளிக்கும் கூட்டம் என்று சிரியாவுக்கான ஐ.நா. தூதர் ஸ்டஃபான் டி மிஸ்துரா விவரித்துள்ளார்.

சிரியா சண்டையில் விமானப்படை பலத்தை பயன்படுத்துவோர் அதை நிறுத்துவதால் மட்டுமே, போர் நிறுத்தத்துக்கான நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் அந்தக் கருத்தை மறுத்துள்ளார். கிளர்ச்சியாளர்களும் போரை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.