சிரியாவில் தீவிர குண்டு வீச்சுத் தாக்குதலில் 30 பேர் பலி

சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதிகள் ,உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்து, மிக கடுமையான அளவு குண்டு வீச்சுத் தாக்குதலை சந்தித்து வருகின்றன.

படத்தின் காப்புரிமை AMEER ALHALBI/AFP/Getty Images
Image caption சிரியாவில் தீவிர குண்டு வீச்சுத் தாக்குதலில் பொது மக்கள் பலர் பலியாகியுள்ளனர். (கோப்புப்படம்)

வெள்ளியன்று நடந்த தாக்குதலில், 30 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது மற்றும் அங்கு குடியிருப்பவர்கள் அவர்களின் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

வொய்ட் ஹெல்மட் என்ற தன்னார்வ மீட்புப் பணியாளர்கள் குழு பயன்படுத்தும் மூன்று மையங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போவின் கிழக்கு பாதி பகுதியை கைப்பற்ற , தான் ஒரு புதிய தாக்குதலை தொடங்கப் போவதாக சிரியா அரசு அறிவித்ததை தொடர்ந்து, பொழுது விடிந்த உடன் தாக்குதல்கள் தொடங்கின.

ராணுவம் தரை நடவடிக்கைக்கு முன்னோட்டம் தான் இந்த குண்டுதாக்குதல் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்