இத்தாலி: பூகம்பத்தால் அழிந்த வரலாற்று சிறப்புமிக்க கிராமங்கள் சீரமைக்கப்படும் என பிரதமர் உறுதி

  • 23 செப்டம்பர் 2016

கடந்த மாதம் மத்திய இத்தாலியில் ஏற்பட்ட பூகம்பத்தில் அழிந்த வரலாற்று சிறப்புமிக்க கிராமங்கள் மீண்டும் முழுமையாக சீரமைக்கப்படும் என்று இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்ஸி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்ஸி

இந்த பூகம்பம் 4.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதங்களை உண்டாக்கியது.

இந்த சீரமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் நிதி, அரசாங்க நிதியிலிருந்தும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இத்தாலி கோரும் தள்ளுபடிகள் மூலமும் வரும் என்று பிரதமர் ரென்ஸி செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பூகம்பத்தின் கோர முகம்

பூகம்பங்களை தாக்குபிடிக்கக்கூடிய பள்ளிக்கூடங்களை கட்டுவதில் செலவு செய்யப்படும் தொகைக்கு, ஐரோப்பிய ஒன்றியம் வகுத்திருக்கும் வரவு செலவுத்திட்ட வரயறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய தலைப்புகள்