இராக்: சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதலில் 12 பேர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இராக்கின் திக்ரீத் நகரில் வடக்கே உள்ள ஒரு போலிஸ் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராக் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

சோதனைச்சாவடியில் நான்கு போலிசாரை சுட்டுக் கொன்ற பிறகு தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக போலிஸ் மற்றும் ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற இரு தீவிரவாதிகள் நகரின் எல்லைவரை, டிரக்கை ஓட்டிச்சென்று வெடிக்க வைத்ததில் 8 பேர் கொல்லப்பட்டதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதங்களில், பாக்தாத்தின் வடக்கே உள்ள இந்நகர் ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டதிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலிலே இது முதன்மையானதாகும்.

தொடர்புடைய தலைப்புகள்