ஃபின்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறியை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் பேரணி

ஃபின்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறி மற்றும் வலதுசாரி தீவிரவாத வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஃபின்லாந்த் தலைநகர் ஹெல்சிங்கியில் சுமார் 15,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

ஃபின்லாந்த் தலைநகர் ஹெல்சிங்கியில் சுமார் 15,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

குவோப்பியோ நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஃபின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலா கலந்து கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெரும்பாலான ஃபின்லாந்த் மக்களுக்கு அதிகரித்து வரும் தீவிரவாத வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கிறது என பிரதமர் சிபிலா தெரிவித்துள்ளார்.

புதிய நாஜி தலைவர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் நபர் ஒருவர் உயிரிழந்ததன் தொடர்ச்சியாக இந்த எதிர்ப்புப் பேரணிகள் நடைபெறுகின்றன.

பெரும்பாலான ஃபின்லாந்த் மக்களுக்கு அதிகரித்து வரும் தீவிரவாத வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கிறது என பிரதமர் சிபிலா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்