அலெப்போ நகரில் 20 லட்சம் பேர் தண்ணீர் இல்லாமல் அவதி

சிரியா நகரான அலெப்போவில் உள்ள சிவில் பாதுகாப்பு தொண்டர்கள், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள மாவட்டங்களில் மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AMEER ALHALBI/AFP/Getty Images
Image caption நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. அலெப்போவில் ஒரு சிறுவனை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லும் நபர்.

நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மேலும், மருத்துவமனைகள் காயமடைந்தவர்களை சமாளிக்க போராடி வருகின்றன என்று செய்திகள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை OMAR HAJ KADOUR/AFP/Getty Images
Image caption வான் தாக்குதல் காரணமாக உதவி பொருட்களை மக்களுக்கு அளிப்பதில் சிரமம் உள்ளது. (கோப்புப்படம்)

கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள மாவட்டங்களில் அரசின் ஆதரவுடன் வான்வாழி தாக்குதல்கள் நடந்ததால், நீரேற்று நிலையம் சேதமடைந்தது. அதற்கு பதிலடியாக மேற்கு அலெப்போ நகரத்தில் நீர் இறைக்கும் நிலையம் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், அலெப்போ நகரம் முழுவதும் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறையானது பழுது பார்க்கும் குழுக்களை அங்கு சென்றடைவதைத் தடுக்குகிறது என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கூறியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்