ஏமனில் அமெரிக்க விமான தாக்குதலில் அல் கய்தா தீவிரவாதிகள் 4 பேர் சாவு

ஏமனில், அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல் என்று நம்பப்படும் தாக்குதலில், அல் கய்தா தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தகிக்கப்படும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை SALEH AL-OBEIDI/AFP/Getty Images
Image caption தொடர் தாக்குதல் காரணமாக ஏமனில் பொது மக்கள் அவதியுற்று வருகின்றனர். (கோப்புப்படம்)

ஏமன் தலைநகர் சானாவின் கிழக்கில் உள்ள மாரிப் மாகாணத்தில் ஒரு வாகனத்தில் பயணம் செய்த ஒரு உள்ளூர் தளபதி மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வாரத்தில் ஏமனில் அல் கய்தா சக்திகள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருப்பதற்கு மத்தியில், ஏமன் நாட்டில் போராளிகளின் பலம் மற்றும் செல்வாக்கு வளர்ந்துள்ளது. அவர்கள் நீண்ட காலமாக இங்கு நிலைகொண்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்