அமெரிக்காவில், ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகம் திறப்பு

ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரபூர்வமாக இன்று திறந்து வைத்தார்

படத்தின் காப்புரிமை AP
Image caption அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் இந்தக் கட்டிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் இந்த அருங்காட்சியம் உள்ளது. இது அமெரிக்காவுக்கும் மற்றும் இந்த நாட்டிற்கு முதலில் அடிமைகளாக வந்த மக்களுக்கும் உள்ள சிக்கலான உறவை விவரிக்கும் இடமாக உள்ளது.

அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் செய்யப்பட்ட இரும்பு வேலைப்பாடுகளின் அடிப்படையிலான வெண்கல நிறமுள்ள பின்னல் வடிவ வேலைப்பாடு இந்தக் கட்டிடத்தின் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption அமெரிக்க அதிபர் ஒபாமா, முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அருங்காட்சியக திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்

சிவில் உரிமைகள் இயக்கத்தை தூண்டிய எம்மிட் டில் என்ற கொலைசெய்யப்பட்ட ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க சிறுவனின் சவப்பெட்டி உட்பட கிட்டத்தட்ட 3,000 காட்சிப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.