போதை பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் குறித்த விமர்சனத்துக்கு பிலிப்பைன்ஸ் அமைச்சர் மறுப்பு

பிலிப்பைன்ஸில் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட அரசால் மேற்கொள்ளப்பட்ட போதை பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி எழுந்துள்ள சர்வதேச விமர்சனத்தை, ஐநா பொது சபையில் நிகழ்த்திய தனது உரையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் மறுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பெர் ஃ பெக்டோ யாசாய்

பிலிப்பைன்ஸின் வெளியுறவு அமைச்சரான பெர் ஃ பெக்டோ யாசாய், தேவையற்ற குறுக்கீடுகள் இல்லாமல் தனது தேசிய இலக்குகளை அடைய தன் நாடு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

கடந்த மே மாதத்தில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்த், நாட்டில் ஊழல் மற்றும் , குறிப்பாக, போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை ஆறு மாதங்களுக்குள் அகற்றி விடுவதாக வாக்குறுதியளித்திருந்தார்.