வாஷிங்டன் துப்பாக்கிச்சூடு: 20 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் பலியான சம்பவத்தில், துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை வாஷிங்டன் மாகாண போலிசார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பர்லிங்டன் நகரில் உள்ள ஷாப்பிங் மால்

துருக்கியில் பிறந்தவரான 20 வயது அர்கன் செடின் என்பவர் ஒரு தெருவில் நடந்து சென்ற போது போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அர்கனை கைது செய்த போலிசாரில் ஒருவர், அந்த நபர் ஆயுதம் எதையும் வைத்திருக்கவில்லை என்றும், தனக்கு என்ன நடக்கிறது என்பதை அவர் உணராத நிலையில் இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

பர்லிங்டன் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் நடைபெற்ற தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாக புலப்படவில்லை.

தீவிரவாத குழுக்களுடன் அந்த சந்தேக நபருக்கு தொடர்புகள் இருக்கவில்லை என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதனை பயங்கரவாதம் செயலாக இருக்கலாம் என்பதையும் அவர்கள் நிராகரிக்கவில்லை.