அலெப்போ வடக்கே போராளிகள் வசமுள்ள பகுதிகளில் விமானத்தாக்குதல்

அலெப்போவின் வடக்கே கேந்திர முக்கியத்துவம் பெற்ற அதே சமயம் போராளிகளின் வசமுள்ள பகுதிகள் மீது ரஷியா மற்றும் சிரியா போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடந்த சனிக்கிழமை அன்று ஹண்டாரட் முகாம் என்றழைக்கப்படும் பகுதியை அரசு படையினர் கைப்பற்றி இருந்தனர்.

கடந்த சனிக்கிழமை அன்று ஹண்டாரட் முகாம் என்றழைக்கப்படும் பகுதியை அரசு படையினர் கைப்பற்றி இருந்தனர்.

ஆனால், பிரிட்டனிலிருந்து இயங்கும் மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் அமைப்பானது, போராளிகள் இரவில் பதில் தாக்குதல் நடத்தி ஹண்டாரட் முகாமை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய விநியோக பாதை ஒன்றை மேட்டுப்பாங்கான இடத்திலிருந்து பார்த்துக் கண்காணிக்க கூடிய இடத்தில் அமைந்திருப்பதால், இந்த முகாம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்