ஆப்கான் பாதுகாப்பு படையினரால் முக்கிய பாகிஸ்தான் தாலிபான் தளபதி கொலை ?

  • 26 செப்டம்பர் 2016

ஆப்கான் பாதுகாப்பு படையினரால் ஒரு முக்கிய பாகிஸ்தான் தாலிபான் அமைப்பு தளபதி கொல்லப்பட்டதாக, கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை TTP
Image caption ஆஸாம் தாரிக் (கோப்புப் படம்)

பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பாக்டிகா மாகாணத்தில், ஆஸாம் தாரிக் என்ற முக்கிய தாலிபான் தளபதி இறந்துள்ளார்.

பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் முன்னாள் பேச்சாளராக இருந்த தாரிக், ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த குழுவிலிருந்து பிரிந்த சென்ற பிரிவின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டார்.

ஆப்கான் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தங்களின் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதிலிருந்து, இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தாலிபான் அமைப்பு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்