அமெரிக்காவில் தஞ்சம் கோரும் எத்தியோப்பிய நடிகர்

  • 26 செப்டம்பர் 2016

முக்கிய எத்தியோப்பிய நடிகர் ஒருவர், அமெரிக்காவில் தஞ்சம் கோரியுள்ளார். எத்தியோப்பிய பாதுகாப்பு படைகள் அட்டூழியத்தில் ஈடுபடுவதாக அவரால் விமர்சிக்கப்படுவதே அதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எத்தியோப்பியாவில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டம் (கோப்புப் படம்)

செனா சு செகயே என்னும் அவர், புகழ்பெற்ற எத்தியோப்பிய திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார்; அம்ஹர இனக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

அம்ஹர மற்றும் ஒரொமொ ஆகிய இரண்டும் மிப்பெரிய இனக்குழுக்கள். அவை பல மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றன; பல பேர் உயிரிழந்துள்ளனர்.

செனா சு செகயே, சமீப காலங்களில் எத்தியோப்பியாவில் இருந்து வெளியேறும் பிரபல நபர் ஆவார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது ஒரொமோ இனத்தைச் சேர்ந்த மராத்தான் வீரர் ஒருவர், அரசுக்கு எதிரான சமிக்ஞைகளுக்குப் பிறகு நாடு திரும்புவதில்லை என முடிவெடுத்திருந்தார்.