ஸ்பெயினில் முன்னாள் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவருக்கு எதிராக போராட்டம்

ஸ்பெயினில் மோசடி குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணைக்கு வந்த முன்னாள் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ரொட்ரிகோ ராட்டோவிற்கு எதிராக போராட்டக்காரர்கள் கேலிக் கூச்சல் எழுப்பினர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரொட்ரிகோ ராட்டோ (கோப்புப் படம்)

ஸ்பெயினின் முன்னாள் பொருளாதார அமைச்சராகவும் இருந்த ராடோ, நாட்டின் முன்னிலை வங்கி ஒன்றின் தலைவராக இருந்த போது நிதியை தவறாக பயன்படுத்தினார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ராடோ மற்றும் அவருடன் 64 பேர் இணைந்து, பின்னாளில் பாங்கியா என்று மாறிய கஜா மட்ரிட் வங்கி நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு அதிகாரபூர்வமற்ற கிரடிட் கார்டுகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பத்து வருட கால கட்டத்தில், சுமார் 12 மில்லியன் யூரோக்கள் ஆடம்பர விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக செலவழிக்கப்பட்டுள்ளது.

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ராட்டோ மறுத்துள்ளார்.

இந்த வங்கி 2012ம் ஆண்டு ஏறக்குறைய நெருக்கடியில் சிக்கி விழும் நிலைக்குத் தள்ளப்பட்டது, ஸ்பெயினின் நிதித்துறையை ஐரோப்பிய ஒன்றியம் கடன் மற்றும் உதவி தந்து காப்பாற்ற வேண்டிய சூழலுக்குக் கொண்டு சென்றது.