அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலரி-ட்ரம்ப் தொலைக்காட்சி விவாதம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலரி-ட்ரம்ப் தொலைக்காட்சி விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சரத்தில் வேட்பாளர்கள் நேரடி விவாதத்தில் ஈடுபடும்போது, வாக்காளர்களுக்கு அவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த விவாதங்கள் வெற்றி தோல்வியில் முக்கிய பங்கு வகிக்கின்றன எனக் கருதப்படுகின்றன.

இத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஒருவருடன் ஹிலரி கிளிண்டன் எப்படி விவாதிப்பார் என்பதே வாக்காளர்கள் எதிர்நோக்கும் கேள்வியாக உள்ளது.

ஹிலரி கிளிண்டன் தனது யுத்திகள் குறித்து பல ஆலோசனைகள், ஒத்திகைகளில் ஈடுபடும் அதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் தடாலடி விவாதங்களுக்காக அறியப்பட்டவர்.

ஆனால் அரசியல் ஆய்வாளர்களோ இப்படியான தொலைக்காட்சி விவாதங்கள் பரபரப்பாக இருந்தாலும், அதிபர் பதவியை பிடிப்பதில் யதார்த்த ரீதியில் உதவுவது இல்லை என்கிறார்கள்.

இருந்தாலும் இந்த விவாதங்களில் இரு வேட்பாளர்களும் அடக்கி வாசிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது என அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.