குழந்தைகளுக்கான பிரத்யேக காசநோய் மருந்து இன்று கென்யாவில் தொடக்கம்

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நுரையீரல் நோயான காச நோயை குணப்படுத்த உலகின் முதல் மருந்து இன்று மாலையில் கென்யாவில் தொடங்கி வைக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய காச நோய்

மூன்று மருந்து பொருட்கள் அடங்கிய இந்த காசநோய் மாத்திரை நீரில் கரைந்து விடும் தன்மையுடையதாக இருப்பதால், குழந்தைகளுக்கு ஆறு மாத சிகிச்சையினை நிறைவு செய்ய இது எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது வரை, காசநோயை குணப்படுத்த பெரியவர்களுக்கு என்று வடிவைக்கமைப்பட்டுள்ள பல மாத்திரைகள் மட்டுமே இருப்பதால், குழந்தைகளுக்கு தருவதற்காக அவை நசுக்கப்பட வேண்டியதாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 லட்சம் குழந்தைகள் உலகெங்கிலும் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள் .

தொடர்புடைய தலைப்புகள்