கொலம்பிய உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரிய ஃபார்க் குழு தலைவர்

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், கொலம்பிய அரசுடன் நடந்த 52 ஆண்டு ஆயுத மோதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் கொலம்பியாவின் மிகப் பெரிய போராளிக் குழுவின் தலைவர் மன்னிப்பு கோரினார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அமைதி ஒப்பந்த நிகழ்ச்சி

கார்ட்டாஹைனா நகரில் நடந்த அமைதி ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொண்ட டிமோசென்கோ என்றழைக்கப்படும் ஃபார்க் போராளி குழுவின் தலைவரான ரொட்ரிகோ லொன்டோனோ, தனது குழு ஆயுத பயன்பாட்டினை கைவிடப் போவதாக அறிவித்தவுடன், அவருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் எழுந்து நின்று தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

ஒரு துப்பாக்கி தோட்டாவால் உருவாக்கப்பட்ட எழுதுகோலில் ( பேனா) அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட டிமோசென்கோ மற்றும் கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் ஆகிய இருவரும் கொலம்பிய மண்ணில் முதல் முறையாக கை குலுக்கி கொண்டனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் கொலம்பிய அதிபர்

ஐநா பொது செயலாளர் பான் கி மூன் உள்பட இந்த அமைதி ஒப்பந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல விருந்தினர்களும் அமைதியை குறிக்கும் அடையாளமாக வெண்ணிற ஆடைகளை அணிந்திருந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்