90 சதவீதத்திற்கும் மேலானோர் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலக மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் மேலானோர் அதிக அளவு காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில்வாழ்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption உலகை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு

தென் கிழக்கு ஆசியா, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகள் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Image caption வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு

இந்த பிரச்சனை பொது சுகாதார அம்சத்தில் ஒரு அவசர நிலையை உருவாக்கியுள்ளதாக ஐநா அமைப்பின் பேச்சாளரான மரியா நெய்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மிக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் பல மில்லியன் உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ள இதய மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற உடல் நலக் குறைபாடுகளுக்கும், காற்று மாசுபாடுக்கும் தொடர்புள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்