நைஜீரியாவில் போகோ ஹராம் அமைப்பை தோற்கடிப்பதில் இருக்கும் கடும் சவால்

நைஜீரியாவில் ஏழு வருடமாக நடந்து வரும் இஸ்லாமியவாதக் கிளர்ச்சியைத் தோற்கடிப்பதில், அதிக சவால்களை சந்திப்பதாக நைஜீரிய விமானப்படையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

பல போக்கோ ஹராம் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக கூறப்படும், சம்பீசா வனத்தின் பரப்பளவு காரணமாக அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஏர் மாஷல் சாதிக் பாபா அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன் சிபோக்கில் உள்ள பள்ளியிலிருந்து கடத்தப்பட்ட 200க்கும் அதிகமான நைஜீரிய பெண்களை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளதற்கும் இதுவே காரணம் அவர் தெரிவித்துள்ளார்.

தகுந்த உபகரணங்கள் இல்லாமையும் ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட சிபோக் பெண்களை மீட்க முடியாத ராணுவத்தின் இயலாமை குறித்து விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.