தமிழக உள்ளாட்சித் தேர்தல்: திமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வரும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுகவெளியிட்டுள்ளது.

Image caption உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள அக்கட்சியின் தலைமைக் கழகம், அந்த மாநகராட்சிகளில் சில வார்டுகளை தங்களின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, தமிழக உள்ளாட்சி தேர்தல் தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கு மறு நாளே அதிமுகவின் வேட்பாளர் பட்டியலும் வெளியானது. அதன்படி, சென்னை மாநகராட்சி உளப்பட 12 மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ளது.

நேற்று, அவர்கள் அனைவரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்