டாய்ச்செ வங்கியின் மீட்புக்கு உதவுகிறோமோ? ஜெர்மனி அரசு மறுப்பு

  • 28 செப்டம்பர் 2016

டாய்ச்செ வங்கிக்கான மீட்பு திட்டத்தினை தாங்கள் தயார் செய்து வருவதாக வெளியான ஒரு ஊடக தகவலை ஜெர்மனி அரசு மறுத்துள்ளது.

Image caption சிக்கலில் டாஷ் வங்கி?

ஜெர்மனியின் மிகப் பெரிய கடன் வழங்கும் நிறுவனமான டாய்ச்செ வங்கி, கடந்த 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியில் அதன் பங்கிற்காக, அமெரிக்க நீதித் துறையின் சார்பாக அனுப்பப்பட்ட 14 பில்லியன் டாலர் அபராதத்தைக் கட்ட வேண்டிய சூழலில் டாய்ச்செ வங்கி உள்ளது.

இது குறித்து பெர்லினில், ஜெர்மனியின் நிதி அமைச்சக பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்த செய்தித்தாள் அறிக்கை தவறானது என்றும், இந்த சிக்கலில் இருந்து டாய்ச்செ வங்கியை விடுவிக்க, அரசு எந்த மீட்பு திட்டத்தையும் செயல்படுதத முயன்று கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, டி சைட் என்ற வாராந்திர பத்திரிக்கை, மிகவும் செலவு உண்டாக்கக்கூடிய இந்த வழக்கினை சந்திக்க தேவையான மூலதனத்தை அதிகரிக்க டாய்ச்செ வங்கியால் முடியவில்லையென்றால், அவர்களுக்கு உதவ அரசு அதிகாரிகள் மீட்பு திட்டமொன்றை தயார் செய்து வருவதாக செய்தி வெளியிட்டது.

தொடர்புடைய தலைப்புகள்