ஷீமோன் பெரெஸ்-வாழ்வும் பங்களிப்பும்
ஷீமோன் பெரெஸ்-வாழ்வும் பங்களிப்பும்
கடந்த 1990களில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையே முதல் முறையாக அமைதி உடன்பாட்டை கையெழுத்திடப்படும் சமயத்தில் அமெரிக்கா பல தலைவர்களை ஒருங்கிணைத்தது.
ஆஸ்லோ உடன்படிக்கைகள் என அழைக்கப்பட்ட அந்த சமாதான உடன்பாடுகளில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஷிமோன் பெரேஸும் ஒருவர்.
ஆனால் அந்த உடன்பாடு கொடுத்த நம்பிக்கை வெற்றிபெறவில்லை. இருந்தாலும் அந்த நம்பிக்கையை பெரிய அளவுக்கு கொடுத்தவர் பெரேஸ்.
அந்த அமைதி உடன்பாடு ஏற்படுவதற்கு பணியாற்றியதற்காக அவருக்கு 1994ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. உலக அரங்கில் அவர் பிரபலமாக இருந்தாலும், உள்நாட்டு வாக்காளர்களிடம் அவருக்கு செல்வாக்கு அந்த அளவுக்கு இல்லை.
அவரது வாழ்வும் பங்களிப்பும் குறித்த பிபிசியின் காணொளி.