துருக்கி: 3 மாதங்களுக்கு அவசரகால நிலையை நீட்டிப்பு செய்தார் அதிபர் எர்துவான்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் எர்துவான்

துருக்கியில் மேலும் மூன்று மாதங்களுக்கு அவசர நிலையை நீட்டிக்கலாம் என்ற அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையின் பரிந்துரைக்கு அதிபர் எர்துவான் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து, அவர் குறிப்பிடும் `பயங்கரவாதக் குழுக்களை` முழுவதுமாக ஒழித்து கட்ட கூடுதல் நேரம் தேவைப்படுவதாக எர்துவான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கால நீட்டிப்புக்கு துருக்கியர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினர் மற்றும் அதன் எதிராளியுமான குர்து தீவிரவாதிகளையும் குறிப்பிட்டு பேசிய எர்துவான், சிரியாவுடனான துருக்கி எல்லையில் உள்ள பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்க தான் தீர்மானித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்