பொது மக்களின் அஞ்சலிக்காக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ஷீமோன் பெரெஸின் உடல்

மறைந்த மூத்த இஸ்ரேலியத் தலைவரும், அரசியல்வாதியுமான ஷீமோன் பெரெஸின் இறுதி சடங்கு, வரும் வெள்ளிக்கிழமையன்று நடக்கவிருப்பதையொட்டி, அவரின் உடல் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஷீமோன் பெரெஸ்

நேற்று (புதன்கிழமை), தனது 93-வது வயதில் காலமான முன்னாள் இஸ்ரேல் பிரதமர் மற்றும் அதிபரான ஷீமோன் பெரெஸுக்கு, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் இறுதி மரியாதையை செலுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஷீமோன் பெரெஸின் மறைவுக்காக அரை கம்பத்தில் பறக்கும் இஸ்ரேலிய கொடி

பல முக்கிய இஸ்ரேலிய பிரமுகர்களின் உடல்களும் புதைக்கப்பட்ட ஜெருசேலத்தில் உள்ள மவுண்ட் ஹெர்ஸல் கல்லறையில் நடக்கவுள்ள இறுதி சடங்கில், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்