மதங்களை விமர்சித்து இணையத்தில் கருத்து: சிங்கப்பூரில் பதின்ம வயது நபர் கைது

சிங்கப்பூரில்இன பேதங்களை உருவாக்கக் கூடிய மற்றும் மத உணர்வுகளை காயப்படுத்திய குற்றமிழைத்தாகக் கண்டறியப்பட்ட 17 வயது பதின்ம நபர் ஒருவருக்கு, 6 வாரங்கள் சிறை தண்டனை வழங்கி சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2015 ஆம் ஆண்டு லீக்குவான் யூவை அவமதிப்பது போலான வீடியோ பதவிற்காக கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டபோது

பதின்ம வயது வலைப்பதிவரான அமோஸ் யீ, கிறித்துவம் மற்றும் இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் வகையில் இணையதளக் கருத்துகள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டிருந்தார்.

இது அமோஸ் யீ யின் இரண்டாவது சிறைதண்டனையாகும்.

2015 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லீக்குவான் யூவை அவமதிப்பதாகக் கண்டறிப்பட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டதற்காக நான்கு வாரங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு கருத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளது என்று மனித உரிமை குழுக்களால் கருதப்பட்டு, அந்த பதின்ம வயது நபரின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்