அதிபரையும் மீறி அமெரிக்காவில் சட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதிபரையும் மீறி அமெரிக்காவில் சட்டம்

அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களுக்கு சவுதி அரேபியா மீது வழக்கு தொடுகக வழி செய்யும் மசோதவுக்கு அதிபரின் நிராகரிப்பையும் மீறி நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்ததுள்ளது.

அதிபர் ஒபாமாவின் ஆட்சி காலத்தில் அவரது அதிகாரத்தையும் மீறி முதல் முறையாக நாடாளுமன்றம் மசோதவொன்றுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின் மூலம் அத்தாக்குதலில் சவுதி அரேபியாவுக்கு தொடர்பு இருந்தது எனக் கூறி வழக்கு தொடுக்க வழி ஏற்படும்.

ஆனால் அத்தாக்குதலில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை சவுதி அரேபியா தொடர்ந்து மறுக்கிறது.

முன்னதாக இந்த மசோதா இருநாட்டு உறவுகளை பாதிக்கும் எனக் கூறி, தனது வெட்டுவாக்கு அதிகாரத்தின் மூலம் பராக் ஒபாமா அதை நிராகரித்தார்.

எனினும் அதையும் மீறி நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேறியது.