சடலங்களாக வீடு திரும்பும் அகதிகளின் அவலம்

சடலங்களாக வீடு திரும்பும் அகதிகளின் அவலம்

எகிப்திய கரையோரமாக நூற்றுக்கணக்கானோருடன் கடந்த வாரம் நீரில் மூழ்கிய குடியேறிகளின் கப்பல், கடல் மடியில் இருந்து மீட்கப்பட்டது.

இதுவரை நூற்று எழுபத்தொன்பது சடலங்கள் மீட்கப்பட்டன. கீழே உள்ள தட்டில் இன்னும் எத்தனை சடலங்கள் இருக்கின்றன என்பது தெரியாது.

இறந்தவர்களில் பலர் எகிப்திய இளைஞர்கள். ஐரோப்பாவுக்கான இந்த ஆபத்தான பயணத்துக்கு அவர்களை எது தூண்டியது என்று பிபிசி அவர்களது உறவினர்களை கேட்டது.