டாய்ச்செ வங்கி பங்குகளின் சரிவை தொடர்ந்து ஐரோப்பிய வங்கிகளின் பங்குகளும் தடுமாற்றம்

ஜெர்மனியின் மிகப் பெரிய கடன் வழங்கும் வங்கியான டாய்ச்செ வங்கியின் ஸ்திரத்தன்மை மீது எழுந்துள்ள கவலைகளைத் தொடர்ந்து ஐரோப்பிய வங்கிகளின் பங்குகள் சரித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

டாய்ச்செ வங்கி, வீட்டுக் கடன்களின் அடிப்படையிலான பத்திரங்களை தவறாக விற்றதாக எழுந்துள்ள விவகாரத்தில் அமெரிக்காவில் பெரிய அளவில் நிதி அபராதத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த செய்தியை அடுத்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கை தொடர்ந்து தடுமாற்றம் கண்டு வருவதால் ஐரோப்பிய சந்தையில் டாய்ச்செ நிறுவனத்தின் பங்குகள் புதிய சரிவை சந்தித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டாய்ச்செ வங்கி

தனது வங்கி ஆதாரமற்ற ஊகங்களுக்கு இலக்காகி இருப்பதாக வங்கியின் தலைமை நிர்வாகி, ஜான் க்ரையேன், கூறியுள்ளார். ஆனால் வங்கி அடிப்படையில் வலுவாக உள்ளது என்றார்.

டாய்ச்செ வங்கியின் பிரச்சனைகள் மீண்டும், ஐரோப்பிய வங்கிகளின் மீதான பரந்த அளவில் கவலைகளை வலுப்படுத்துவதாக உள்ளன. அதில் பெரும்பாலான வங்கிகள் வலுவான லாபத்தை ஈட்ட தற்போதும் மிகச் சிரமப்படுகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்