தெற்கு சூடானில் ஒரு லட்சம் மக்களின் பாதுகாப்பு கவலை அதிகரிப்பு

தெற்கு சூடானின் யேய் நகரில் அரசு படைப்பிரிவுகளிடம் சிக்கியிருக்கும் சுமார் ஒரு லட்சம் மக்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரிப்பதாக ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை UNHCR / Amelia Shepherd-Smith
Image caption தெற்கு சூடானில் அரசுப் படைப்பிரிவுகளிடம் சிக்கியிருக்கும் ஒரு லட்சம் மக்களின் பாதுகாப்பு பற்றி கவலை அதிகரித்து வருகிறது

பதவி நீக்கப்பட்ட துணை அதிபர் ரெய்க் மச்சாரின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அவ்விடத்தை விட்டுசெல்லும் மக்களை, படையினர் தடுத்து நிறுத்துவதாக ஐநா அகதிகள் உயர் ஆணையகத்தின் செய்தித்தொடர்பாளர் வில்லியம் ஸ்பின்ட்லர் கூறியிருக்கிறார்.

மக்களுக்கு எதிரான கொடூர வன்முறைகளை பற்றி பீதியடைந்திருக்கும் ஆண்களும் பெண்களும் , பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட மக்கள் பலர் வெட்டி கொல்லப்பட்டதாகக் கூறுவதாக இந்த அமைப்பு குறிப்பிடுகிறது.

விவசாயிகள் வயல்களுக்கு செல்ல முடியவில்லை. பயிர்கள் அழுகியுள்ளன. அடுத்த ஆண்டு நடவு செய்யும் பருவ காலத்தை தவறவிடுகின்ற ஆபத்தில் விவசாயிகள் இருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்