உலகத் தலைவர்களின் அஞ்சலியோடு ஷீமோன் பெரெஸின் உடல் நல்லடக்கம்

இஸ்ரேலை நிறுவிய மூதாதையர்களில் கடைசியானவரான ஷீமோன் பெரெஸின் உடல், உலகத் தலைவர்கள் பங்கேற்ற இறுதிச் சடங்கிற்கு பின்னர், ஜெருசலேமிலுள்ள தேசிய கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஒஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தான சில மாதங்களுக்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம். ஷீமோன் பெரெஸ் (இடது), மஹமூத் அப்பாஸ் (நடு), அப்போதைய எகிப்து வெளியுறவு அமைச்சர் அம்ர் மௌசா (வலது)

அண்டை நாடுகளோடு நியாயமான அமைதியான சகவாழ்வு காணும் இஸ்ரேல் என்ற நோக்கத்திற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் செலவிட்ட பெரெஸின் கனவு இன்னும் நனவாகவில்லை என்று இறுதிச் சடங்கில் அஞ்சலி உரை வழங்கிய போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி

நெல்சன் மண்டேலா போல இருபதாம் நூற்றாண்டின் மாமனிதர்களை ஷீமோன் பெரஸ் தனக்கு நினைவூட்டுவதாக ஒபாமா கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டோரில் பாலத்தீன தலைவர் மஹமூத் அப்பாஸூம் ஒருவர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஐக்கிய ராஜ்ய இளவரசர் சார்லஸ், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்த் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்

ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் துன்புறும் பாலத்தீனர்களுக்கு காட்டுகின்ற அவமரியாதை என்று கூறி ஹமாஸ் கடும்போக்கு இயக்கம் அப்பாஸ் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதை கண்டித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்