நைஜீரியாவில் அதிக அளவிலான பிரசவகால மரணங்கள்: ஐநா

  • 30 செப்டம்பர் 2016

உலகளவில் பிரசவத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகளில் பத்தில் ஒன்று நைஜீரியாவில் நிகழ்ந்து வருவதாக மூத்த ஐ.நா அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அங்கு தாய்மார்கள் அடிக்கடி கர்ப்பம் தரிப்பதால் பிரசவ மரணங்களுக்கு அதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

சரியான இடைவெளிகளில் கர்ப்பம் தரிக்க பெண்களுக்கு கருத்தடை உதவியாக இருந்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளது என்றும், இறுதியாக அடைந்த கர்ப்பத்திலிருந்து மீண்டு வர போதுமான கால அளவை கருத்தடை அளிக்கிறது என்றும் ஐ.நாவின் ஜனத்தொகை நிதியத்தின் செயல் இயக்குநர் பாபடூண்டே ஓஷோமேயீங் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டிலிருந்து, நைஜீரியாவில் கருத்தடையை பரப்பும் முயற்சிகள் சிறிய அளவிலான முன்னேற்றத்தையே கண்டுள்ளதாகவும், பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் நைஜீரியர்களில் சுமார் பத்து சதவிகிதம் பேர் இதனை பயன்படுத்துவதாகவும் அறிக்கை ஒன்றில் நிதியம் தெரிவித்துள்ளது.

குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் மிக அதிக அளவு மரணங்களுக்கு குறிப்பாக வட நைஜீரியாவில் போதிய அளவு மருத்துவமனைகள் இல்லாததும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்