பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை விரைவுப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் ஒப்புதல்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் உலகின் முதல் விரிவான ஒப்பந்தமான பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவதை விரைவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலிருந்து அடுத்த வாரம் அதற்கான ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆதரவு வழங்கியுள்ள நிலையில், நவம்பர் மாதம் இந்த ஒப்பந்தம் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அதாவது, உலகை மாசுபடுத்தும் நாடுகள் அனைத்தும், ஏழை பணக்கார நாடு என்ற வித்தியாசமின்றி, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக தங்கள் பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒப்பந்தம் ஏற்டுவதற்கு பல சமரசங்களைச் செய்யவேண்டியிரந்தது.

போலாந்து நிலக்கரியை சார்ந்து இருப்பதற்கு விலக்கு அளிக்கும்வரை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்