கலே குடியேறிகள் முகாமிலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காணாமல் போகலாம்: யூனிசெஃப்

'காடு' என்றழைக்கப்படும் வட பிரான்ஸில் உள்ள குடியேறிகள் முகாமில் உள்ள பெற்றோர் துணை இல்லாமல் தனியாக இருக்கும் குழந்தை அகதிகளை இடமாற்றும் செய்யும் பணியை துரிதப்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிறுவனமான யூனிசெஃப் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கலே குடியேறிகள் முகாமிலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காணாமல் போகலாம்: யூனிசெஃப்

கலேயில் உள்ள குடியேறிகள் முகாம் மூடப்படும் என்ற பிரான்ஸ் அதிபர் ஒல்லாந்தின் அறிவிப்பு கவலை தருவதாகவும், இது அங்கு தனியாக வாழுந்து வரும் குழந்தைகள் காணாமல் போகும் சூழலுக்கு வழிவகுக்கும் என்று யூனிசெஃப் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆண்டு முன்னதாக கலேயில் இருந்த முகாமின் ஒரு பகுதி இடித்து தள்ளப்பட்ட போது குழந்தைகள் பலர் காணாமல் போனதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த முகாமில் உள்ள சுமார் 400 குழந்தைகள் பிரிட்டனுக்குள் நுழையும் உரிமையை பெற்றிருப்பதாக தொண்டு நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்