புதிய வாழ்வை தொடங்க வட கொரியாவை விட்டு வாருங்கள்: தென் கொரிய அதிபர் அழைப்பு

  • 1 அக்டோபர் 2016

வட கொரியர்கள் தங்கள் நாட்டை கைவிட்டுவிட்டு தப்பியோடி தென் கொரியாவுக்கு வர வேண்டும் என்று தென் கொரிய அதிபர் பாக் குன் ஹே தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தென் கொரிய அதிபர் பாக் குன் ஹே

அவர் ஆற்றிய ஒரு உரையின் போது, நாட்டின் வட எல்லை பகுதியில் தினம் தினம் நடந்துவரும் கொடூரமான யதார்த்த்தங்களை தான் அறிவதாக கூறினார்.

மேலும், தென் கொரியாவில் வட கொரியர்கள் புதிய சுதந்திரமான வாழ்க்கையை தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த பல ஆண்டுகளில், சுமார் 30 ஆயிரம் பேர் தங்களுக்கு எற்படக்கூடிய சொந்த ஆபத்தை பொருட்படுத்தாமல் நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர்.

கடந்த வியாழன் அன்று, வட கொரியா படையை சேர்ந்த ஒருவர் அங்கிருந்து தப்பியோடி இரு நாடுகளுக்கு இடையேயான அதிக பாதுகாப்பு கொண்ட பகுதியை நடந்தே கடந்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்