சோமாலிய தலைநகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இருவர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

சோமாலிய தலைநகர் மொகதிஷுவில் நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் மத்தியில் இருக்கும் ப்ளூ ஸ்கை என்ற உணவு விடுதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

சமீப தினங்களில் மொகதிஷுவில் இரண்டாவது முறையாக நடக்கும் மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

இரு குண்டு வெடிப்பு தாக்குதல்களையும் அல் ஷபாப் இஸ்லாமியவாதத் தீவிரவாதிகள் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கிளர்ச்சிக்குழு ராணுவ தோல்வியை சந்தித்துள்ளதால் மென்மையான இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கடந்த வாரம், சோமாலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்திசலாம் ஒமர், தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்