அமெரிக்கா: கருப்பின நபர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் காணொளி வெளியீடு

  • 1 அக்டோபர் 2016

அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் கடந்த செவ்வாய் அன்று, வணிக மையம் ஒன்றில், நிராயுதபாணியாக இருந்த கருப்பின நபர் கொல்லப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் வீடியோவை அந்நகர போலிசார் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அந்த வீடியோ காட்சிகள்

அந்த வீடியோவில், எல் கஜோனின் புறநகர் பகுதியில் இரு போலிஸ் அதிகாரிகள் உகாண்டாவை சேர்ந்த அகதியான ஆல்ஃபிரட் ஒலாங்கோவை எதிர்கொள்கிறார்கள். அதில், ஒரு அதிகாரி அந்த கருப்பின நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்.

அந்த நபர் ஒழுங்கற்ற வகையில் நடந்து கொண்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆல்ஃபிரட் ஒலாங்கோ

ஆனால், அந்த நபருக்கு மனநல பாதிப்பு இருந்தது என்றும், அவருக்கு அந்த சமயத்தில் தேவையானது உதவியே தவிர துப்பாக்கியால் சுடப்படுவதல்ல என்றும் ஆல்ஃபிரட் ஒலாங்கோவின் தாய் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து எல் கஜோனில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்