ஜார்ஜியாவில் போப் பிரான்சிஸ் பயணம்

  • 1 அக்டோபர் 2016

ரோமன் கத்தோலிக்க வழிபாடுகளில் தன்னுடைய பக்தர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று உள்ளூர் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவ திருச்சபை அறிவுறுத்திய பிறகு, ஜார்ஜியாவில் பயணம் மேற்கொண்டு வரும் போப் பிரான்சிஸ் பெரும்பாலும் காலியாக இருந்த ஒரு விளையாட்டு அரங்கில் பிரார்த்தனை நிறைவேற்றியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

திபிலிசியில் நடைபெறும் வழிபாட்டில் ஜார்ஜியாவின் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் பிரதிநிதி குழு ஒன்று கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பரஸ்பர உடன்பாட்டை அடுத்து அங்கு செல்ல வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

வெள்ளிக்கிழமை போப் ஜார்ஜியாவை வந்தடைந்தபோது, வத்திக்கானை 'ஆன்மீக ஆக்கிரமிப்பாளர்' என்று கண்டிக்கின்ற அட்டைகளை தாங்கியிருந்த ஆர்த்தோடாக்ஸ் கிறித்தவ போராட்டக் குழுவினர் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

தொடர்புடைய தலைப்புகள்