அலெப்போ மருத்துவமனை இரண்டாவது முறையாகத் தாக்கப்பட்டது

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சிரியாவின் அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில், அந்த பகுதியிலேயே பெரிய மருத்துவமனை இரண்டு நாட்களுக்குள் மீண்டும் தாக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அலெப்போவின் பெரும்பகுதி இடிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது

இரண்டு பீப்பாய் குண்டுகளால் இந்த மருத்துவமனை தாக்கப்பட்டுள்ளதாக அதற்கு ஆதரவு அளித்து வருகின்ற சிரியாவின் அமெரிக்க மருத்துவ சொசைட்டி தெரிவித்திருக்கிறது.

புதன்கிழமை அன்றும் இதே மருத்துவமனை சிரியா அரசு அல்லது ரஷ்ய போர் விமானங்களால் தாக்குதலுக்கு உள்ளானது.

சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது போர்க் குற்றமாகும் என்று கூறி சமீபத்தில் நடந்த இந்த தாக்குதலை பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் ஜான் மார்க் யேரோ கண்டித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்