பிரிட்டனை மீண்டும் சுதந்திர நாடாக மாற்ற அடுத்த வருடம் புதிய சட்டம்: தெரீசா மே

  • 2 அக்டோபர் 2016

பிரிட்டனை மீண்டும் "இறையாண்மை மற்றும் சுதந்திரம்" கொண்ட நாடாக மாற்ற அடுத்த ஆண்டு புதிய சட்டங்களை உருவாக்கப்போவதாக பிரிட்டனின் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தெரீசா மே

சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக அனுமதித்த சட்டம் ரத்து செய்யப்படும் எனவும், நாட்டின் தேர்ந்தெடுப்பட்ட நிறுவனங்களுக்கு அந்த வல்லமையும் அதிகாரமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

ஆனால் பிரிட்டன் சட்டபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் வரை அந்த சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

ஆளும் கன்செர்வேட்டிவ் கட்சியின் ஆண்டு கூட்டத்திற்கு முன்னதாக இந்த கருத்தை தெரிவித்துள்ளார் தெரீசா மே.