900 மில்லியன் டாலர் நஷ்ட கணக்கு: 18 ஆண்டுகள் வரிகட்டாமல் தப்பினாரா டிரம்ப்?

  • 2 அக்டோபர் 2016

டொனால்ட் டிரம்ப், தான் 900 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக நஷ்டம் அடைந்ததாக தாக்கல் செய்திருக்கும் 1995 ஆம் ஆண்டின் வருமான வரி தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அமெரிக்க செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நஷ்டம் மிகப்பெரியது என்றும்; இதனால் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான அவர், சட்டப்பூர்வமாகவே 18 வருடங்கள் வரிச் செலுத்தாமல் இருக்க உதவியிருக்கும் என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

டிரம்பின் வருமான வரி குறித்த தகவல்களை வெளியிட மறுத்த டிரம்பின் பிரச்சார குழுவினர், இழப்பீட்டின் அளவு குறித்து உறுதி செய்யவும் இல்லை அதே சமயம் அதனை மறுக்கவும் இல்லை.

இது வரை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேறெந்த வேட்பாளர்களைக் காட்டிலும் வரி தகவல்கள் பற்றி நன்றாக தெரிந்த, திறன் வாய்ந்த தொழிலதிபர் டிரம்ப் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.