மதகுரு ஃபெத்துல்லா குலனின் சகோதரரை கைது செய்த துருக்கி போலிஸ்

கடந்த ஜூலை மாதம் துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு முக்கிய மூளையாக செயல்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த போதகர் ஃபெத்துல்லா குலனின் சகோதரர் துருக்கி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மதகுரு ஃபெத்துல்லா குலன்

அவரது பெயர் குட்பெட்டின் குலன். மதருகுவின் உடன்பிறப்பு ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

உறவினர்கள் மூலம் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு போலிசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

துருக்கி அதிபர் ரசீப் தாயிப் எர்துவானை பதவியிருந்து இறக்கும் முயற்சியில் தான் ஈடுபடவில்லை என்று மதகுரு ஃபெத்துல்லா குலன் மறுத்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்