குடியேறிகள் பற்றிய ஐரோப்பிய ஒன்றிய திட்டங்கள் கேள்விகளை எதிர்கொள்கின்றன - விக்டோர் ஒர்பான்

உறுப்பு நாடுகள் குடியேறிகளை கண்டிப்பாக குடியமர்த்த வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்களை ஹங்கேரி வாக்காளர்கள் நிராகரித்துவிட்ட நிலையில், அது முக்கிய கேள்விகளை எதிர்கொள்வதாக ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஒர்பான் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஹங்கேரியின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகளை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கவனத்தில் எடுத்துகொள்ள பிரதமர் விக்டோர் ஒர்பான் கேட்டு கொண்டுள்ளார்

வாக்களித்தோரில் 90 சதவீதத்திற்கு மேலானோர் விக்டோர் ஒர்பானுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆனால், இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு செல்லுபடியாகும் அளவுக்கான (50 சதவீதத்திற்கு மேலான) வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

இது பிரதமரின் முயற்சிக்கு கிடைத்திருக்கும் தோல்வி என்று எதிர்க்கட்சியினர் விவரித்திருக்கின்றனர். அவரை பதவி விலக சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

மையப்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவெடுக்கும் முறைக்கு எதிரான வெற்றி இது என்று ஒர்பானின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்