புளூட்டோனியத்தை அகற்றிவிட அமெரிக்காவோடு செய்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ரஷ்யா

  • 3 அக்டோபர் 2016

மோசமாகி வரும் உறவின் சமீபத்திய அடையாளமாக ஆயுதத் தரத்தில் இருக்கின்ற புளூட்டோனியத்தை அகற்றிவிட அமெரிக்காவோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரஷ்யா இடைநிறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்த ரஷ்ய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போல, அணு ஆயுத ஏவுகணைகளின் வெடி பொருட்களுக்குள் புளூட்டோனியம் பயன்படுகிறது.

அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் நட்புறவற்ற செயல்பாடுகளுக்கு பதிலடியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் விளாடிமிர் புதினால் வெளியிடப்பட்ட ஆணை தெரிவிக்கிறது.

16 ஆண்டுகளுக்கு முன்னதாக, முதல் முறையாக கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை அனுசரிப்பதை அமெரிக்காவால் உறுதி செய்ய முடியவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு இதே ஒப்பந்தத்தை மீண்டும் தங்களின் அர்ப்பணத்தை தெரிவித்ததன் மூலம் இரு நாடுகளும் 30 டன் புளூட்டோனியத்தை அகற்ற வேண்டிய அவசியம் உருவாகியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ரஷ்யா யுக்ரைனின் க்ரைமியாவை தன்னோடு இணைத்து கொண்டு, யுக்ரையின் கிழக்கு பகுதியிலுள்ள ரஷ்யா ஆதரவான பிரிவினைவாதிகளுக்கு உதவி வழங்கிய போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமாகியது.

தொடர்புடைய தலைப்புகள்