ஆஃப்கனில் தாலிபன் தீவிரவாதிகள் வசம் வீழ்ந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம்

ஆஃப்கானிஸ்தானில் வடக்கே உள்ள குண்டூஸ் பகுதியிலும், தெற்கில் உள்ள ஹெல்மண்ட் பகுதியிலும் தாலிபன் தீவிரவாதிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆஃப்கன் அரசு படை வீரர்

குண்டூஸ் நகரில் தீவிரவாதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்தியதை அடுத்து அங்கு கடும் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு குண்டூஸ் நகரம் தாலிபன் வசம் வீழ்ந்தது. ஆனால், அரசு படையினர் அதனை மீண்டும் கைப்பற்றினர்.

ஹெல்மண்டில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாவா மாவட்டத்தை தாலிபன் படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அழுத்தத்திற்கு ஆஃப்கன் அரசாங்கம் உள்ளாகி இருக்கிறது.

மாகாண தலைநகர் லஷ்கர் காவிற்கு செல்லும் நுழைவாயிலாக நாவா மாவட்டம் விளங்குகிறது.

சம்பந்தப்பட்ட பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அழுத்தத்திற்கு ஆஃப்கன் அரசாங்கம் உள்ளாகி இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்