கருக்கலைப்பிற்கு தடை விதிக்கும் மசோதாவை எதிர்த்து போலாந்து பெண்கள் வேலை நிறுத்த போராட்டம்

போலந்தில் கருக்கலைப்பு மீது முழுமையான தடையை விதிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட சட்ட மசோதாவை எதிர்தது அங்குள்ள பெண்கள் பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போலந்து பெண்கள் வேலை நிறுத்த போராட்டம்

இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளை செய்ய மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியாளார்களும், மாணவர்களும் தங்களை வேலை மற்றும் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐரோப்பாவிலே மிகவும் கட்டுப்பாடான கருக்கலைப்பு சட்டங்களை போலாந்து கொண்டுள்ளது

போலந்தின் பெரிய நகரங்களான டான்ட்சிக் மற்றும் வார்சாவில், பெண்கள் கறுப்பு ஆடைகள் அணிந்து, கறுப்பு கொடிகளை தெருக்களில் அசைத்தப்படி இந்நாளை 'கறுப்பு திங்கள்' என்று அனுசரிக்கின்றனர்.

ஐரோப்பாவிலே மிகவும் கட்டுப்பாடான கருக்கலைப்பு சட்டங்களை போலந்து கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்ட மசோதாவின்படி, கருக்கலைப்பு செய்தால் அது குற்றமாகக் கருதப்படும்.

மேலும், அதற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

தொடர்புடைய தலைப்புகள்