கருக்கலைப்பு சட்ட மசோதவுக்கு எதிராக போலந்து பெண்கள் வேலைநிறுத்தம்

கருக்கலைப்புக்கு முழுமையாக தடை விதிக்கும் சட்ட மசோதவுக்கு எதிராக போலந்து பெண்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption போலந்தில் முன்மொழியப்பட்டுள்ள கருக்கலைப்பு சட்ட மசோதாவுக்கு ஆதரவு வழங்காதோரின் நிறமாக கறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதுமுள்ள நகரங்களில் பெண்கள் கறுப்பு ஆடைகளை அணிந்தும், கறுப்பு கொடிகளை அசைத்தும் தெருக்களில் ஆப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பாவிலே மிகவும் கட்டுப்பாடான கருக்கலைப்பு சட்டங்களை போலந்து ஏற்கெனவே கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

முனமொழியப்பட்டுள்ள தடை சட்ட மசோதவின்படி, கருக்கலைப்பு செய்கின்ற பெண்களும், அதனை நிறைவேற்றுகின்ற மருத்துவர்களும் குற்றவாளிகளாக கருதப்பட்டு, ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை பெறுவர்.

ஒரே ஒரு முறை, ஒரு கருவை மட்டுமே கருத்தரிக்க அனுமதிக்கவும், கருக்களை உறைநிலையில் பதப்படுத்தி வைப்பதை தடை செய்வும் என செயற்கை முறையில் கருத்தரிப்பதை கட்டுப்படுத்துகின்ற தனியான இன்னொரு மசோதாவும் சமர்ப்பிக்கப்பட இருப்பது குறிப்படத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்