கொலம்பிய அமைதி உடன்பாட்டை மக்கள் நிராகரித்தனர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொலம்பிய அமைதி உடன்பாட்டை மக்கள் நிராகரித்தனர்

கொலம்பியாவில் அரசாங்கத்துக்கும், ஃபார்க் அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட சரித்திர முக்கியத்துவம் மிக்க அமைதி உடன்படிக்கையை வாக்காளர் நிராகரித்ததற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்று அரசியல்வாதிகள் திண்டாடுகிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டதை முன்னெடுத்த ஃபார்க் குழுவுடன் அண்மையில் அரசு உடன்பாடு ஒன்றை எட்டியது.

ஆனால் அதற்கான அங்கீகாரத்தை கோரும் வகையில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு மிக்குறைவான எண்ணிக்கை வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இருந்தாலும் சமாதனத்துக்கான தனது ஆதரவு தொடரும் என அதிபர் ஹுவான் மானுவேல் சாண்டோஸ் உறுதியளித்துள்ளார்.