ஒரு வாரத்தில் மூன்றுமுறை தாக்கப்பட்டுள்ள அலெப்போ மருத்துவமனை

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் அலெப்போ நகரிலுள்ள பெரிய மருத்துவமனை, ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக வான்வழி தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக அங்கிருந்து வருகின்றசெய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AMC
Image caption தாக்குதலில் ஏற்பட்ட இடிபாடுகளின் ஒரு பகுதி

எம்10 மருத்துவமனையின் ஒரு பக்கத்தில் உருவாக்கியிருக்கும் பழுதடைந்த சுவர்கள் மற்றும் பள்ளங்களை ஆர்வலர்கள் வழங்கியிருக்கும் காணொளி பதிவுகள் காட்டுகின்றன.

திங்கள்கிழமை நடந்த தாக்குதலால் மூன்று பராமரிப்பு ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்த மருத்துவமனைக்கு ஆதரவளிக்கும் சிரியாவின் அமெரிக்க மருத்துவ செசைட்டி என்ற அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது.

இந்த மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் இந்த மருத்துவமனை இப்போது பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்குகின்ற மனித உரிமைக்கான சிரியா கண்காணிப்பு குழு சமீபத்திய இந்த தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது

தொடர்புடைய தலைப்புகள்